Blog

  • Home
உலக அளவில் வெப்பநிலை உயர்வதற்கான காரணங்களில் ஒன்று, மரங்களை வெட்டுவதும். நமதுநாட்டில் பல பாரம்பரிய மரங்கள் பல அழிந்து வருகின்றன. அவ்வாறு அழிந்து வரும் மரங்களில் இலுப்பை, இலந்தை, மாவிலங்கம், சந்தன வேங்கை, தான்றி, மகிழம், கோங்கு, விளா, சரக்கொன்றை, கடுக்காய், மகாவில்வம், திருவோடு, பூவரசு, வெட்டிவேர், சந்தனம், நாவல், உருத்திராட்சம், மஞ்சள் கடம்பு,பரம்பை, குமிழ், மலை அரசி , இச்சி மரம், நறு உளி, பன்னீர், இலுப்பை, அசோக மரம், யானை குண்டுமணி போன்றவை ஆலமரமும், அரச மரமும், புளிய மரமும் அதிகமாக காணப்படும். கிராமங்களிலும் இந்த மரங்களை அதிகளவில் பார்க்கலாம். இதில் ஆலமரத்துக்கும், அரச மரத்துக்கும் இடம் அதிகம் தேவை. இதைக்கருத்தில் கொண்டு ஆல, அரச மரங்களை வளர்க்க யாரும் முன்வருவதில்லை. இதனால் இந்த மரங்கள் அழிந்து வருகின்றன.

சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டு வருகிறது.அவற்றை வேருடன் பிடுங்கி மறுநடவு செய்வதற்கோ அல்லது புதிதாக மரங்களை நடவு செய்வதற்கோ யாரும் முன் வருவதில்லை. இதனால் பூமி வெப்பம் அடைந்துள்ளதுடன் காற்று மாசும் ஏற்பட்டு ஆஸ்துமா, சளி, கண்எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல் கோளாறுகளை சந்தித்து வருகின்றோம். அதுமட்டுமின்றி ஏராளமான மரங்களை வெட்டி சாய்த்து இயற்கையை அழித்ததின் பலனை கொரோனா இன்று ஆக்சிஜன் பற்றாக்குறை மூலமாக நமக்கு தெள்ளத் தெளிவாக உணர்த்தி உள்ளது. நமது சுயநலத்தால் இயற்கை படைத்த ஆக்சிஜனை வலுக்கட்டாயமாக அழித்து விட்டு வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றோம்.

விதைப்பந்துகள் மூலமாக வாகை, புங்கன், புளியமரம் உள்ளிட்ட மரங்களின் விதைகளோடு சேர்த்து அபரிதமான ஆக்சிஜனை தரக்கூடிய அரசமரம், நீண்ட ஆயுளோடு நிலைத்து நின்று இயற்கையை பாதுகாக்கும் ஆலமரம், காற்றைச்சுத்திகரிக்கும் வேப்பமரத்தின் விதைகளையும் சேர்த்து தூவுவதற்கு முன்வர வேண்டும்.மருத்துவ குணங்களை கொண்ட மரங்கள், மூலிகைகளை நடவு செய்து இயற்கையை காப்பாற்றுவதற்கு தனிக்கவனம் செலுத்த வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

×