இயற்கையின் மகத்துவம் ஓரறிவு கொண்ட புல், பூடு, செடி, கொடி, மரம் ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு மூன்றறிவு கொண்ட எறும்பு, கரையான், அட்டை. நான்கறிவு கொண்ட நண்டு, தும்பி, வண்டு ஐந்தறிவு படைத்த விலங்கு, பறவை போன்றவைகள் நிறைந்த இயற்கையை பராமரித்து பாதுகாக்கும் ஆற்றல் மிகுந்த வேலைக்காரர்களாக ஆறறிவு கொண்ட மனிதனை இறைவன் படைத்துள்ளார். இயற்கை வளத்தை முழுமையான உயிர்ப்போடு அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதே நமது வேலை.