நிலத்தடி நீரை பெருக்கும் ஒரு ஆகச்சிறந்த மரம் இலுப்பை
மணல்மேடு மற்றும் அதனை சார்ந்த கிழாய், இலுப்பப்பட்டு, குறிச்சி, சித்தமல்லி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட கிராமங்களில் இலுப்பை மரங்கள் தோப்புகளாகவும், தனித் தனி மரங்களாகவும் வளர்க்கப்பட்டு வந்தன. இந்தநிலையில் தற்போது முற்றிலும் அழிந்துவிட்டது.
வவ்வாலுக்கு மிகவும் பிடித்தமான உணவு இலுப்பை பழங்கள் தான். இலுப்பையின் அழிவு வவ்வாலின் அழிவு. வவ்வாலின் அழிவு கொசுவின் வளர்ச்சி. கொசுக்களின் வளர்ச்சி வியாதிகளின் வளர்ச்சி. எனவே இலுப்பை மரத்தை, அழிவில் இருந்து மீட்க ஆங்காங்கே பொதுமக்களும், தமிழக அரசும் இலுப்பை மரங்களை நட்டு பாதுகாக்க வேண்டும்
இந்த மரம் அறைக்கலன்கள், மரச்சாமான்கள், சமையல் பாத்திரங்கள், வண்டிச்சக்கரங்கள், மரப்பெட்டிகள், வீட்டுத்தூண்கள் போன்றவற்றின் தயாரிப்பிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உப்பு நீரை தாங்குவதால் இந்த மரம் படகுகள் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.