Author: AB-Nursery-Admin

  • Home

நீர்நிறைத் தாவரங்கள்

பலா மற்றும் ஒதியன் கன்றுகள் நடவு செய்யப்பட்டு முறையாகப் பராமரிக்கப்படும் பொழுது. இவை துளிர்விடும் நிலையை எட்டிவிடும். இந்த நீர் நிலைகளிலும் இவற்றைச் சுற்றிலும் இருந்த சீமைக் கருவேலம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. விளைவாக, நீர் வரத்துப் பகுதிகள், நீர்நிலையின் உட்பகுதி ஆகியன இயற்கை நீரால் நிறைந்துள்ளன. எவ்விதத் தாவரக் குறுக்கீடும் இவற்றில் இல்லை. நீர் நிறைந்துள்ளதால், இந்நீர் நிலைகளில் உள்ள சீமைக் கருவேலம் விதைகள் அழுகி அழிந்துபோகும். ஒருவேளை மீண்டும் அவை முளைத்தாலும் அவற்றை அழிக்கும் பணியில் […]

View More

வாகை

வாகை மரத்தில் ஆட்டிய செக்கு என்னை இன்று கடைகளில் அதிகம் அனால் வாகை மரங்கள் அடியோடு அழிவின் விளிம்பில் உள்ளது இதற்கு மிகமுக்கிய காரணம் மனிதர்களின் வாகை மர செக்கு என்னை மீது உண்டான நாட்டம் திருவாழ்கொளிப்புத்தூர் திருத்தலத்தின் தலமரமாக விளங்குவது வாகை மரமாகும். இஃது நெடிதுயர்ந்து வளரக் கூடிய பெரிய மரமாகும். பசிய சிறகமைப்புக் கூட்டிலைகளைக் கொண்டது. கொத்தான மகரந்தத் தாள்களையும், தட்டையான காய்களையும் உடையது. உலர்ந்த காய்கள் வெண்மையாய் இருக்கும். இதன் இலை, பூ, […]

View More

சீமைக்கருவேல மரங்கள் அகற்றுதல், மழைதரும் மரங்கள் நட்டுப்பராமரித்தல்

சீமைக் கருவேல மரம் என்றால் என்ன சீமைக் கருவேல மரத்தின் தாவரவியல் பெயர் பரோ சோயிக் ஜூலி ஃப்ளோரா. இத்தாவரம் நாட்டு கருவேல மரத்தை ஒத்து இருப்பதாலும், வெளிநாட்டில் இருந்து வந்ததாலும் சீமைக் கருவேலம் என்று அழைக்கப்படுகிறது. வயல்களின் ஓரங்களில் வேலிக்காக இம்மரங்கள் வளர்க்கப்பட்டதால் வேலிக்கருவேல் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தாவரத்தின் தாயகம் மெக்சிகோ, கரீபியன் மற்றும் தென் அமெரிக்கா ஆகும். ஆனால் உலகில் ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா உள்ளிட்ட கண்டங்களில் உள்ள […]

View More

வாசகம் மட்டுமே செயலில் இல்லை

‘மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்’ என்பது எல்லாம் இன்று வாசகங்களாகவே இருக்கின்றன. மரம் வளர்ப்பிற்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தமிழக வனத்துறை சார்பில் பல லட்சங்கள் செலவழித்து மரம் வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தொடக்க விழாவில் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் வி.ஐ.பிக்களும், அதிகாரிகளும் அதன்பிறகு அந்த மரங்களை கண்டுக்கொள்வதில்லை. சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் அவைகள் பட்டுபோய்விடுகின்றன. அடுத்து, சாலை விரிவாக்கம், நகர வளர்ச்சி உள்ளிட்ட காரணங்களுக்காக மரங்கள் வெட்டப்படுகின்றன. இதனால் தமிழகத்தில் மரங்களின் எண்ணிக்கை ஆண்டுந்தோறும் […]

View More

பேரிடரைத் தடுக்கும் தாழை மரங்கள் தாழம்பூ

தாழையின் சிறப்புகள் தொடும்போது இலையில் இருக்கும் முள் கையை தைக்கும் என்பதால் இதை கைதை எனவும் கூறுகிறார்கள். குறிஞ்சிப்பாட்டில் 83வது மலராகக் குறிப்பிடப்படும் கைதை, தாழையின் மலரான தாழம்பூ ஆகும். நம்புதாழை, வேதாழை, தாழையூத்து, பூந்தாழை, தாழைக்காடு, தாழையூர் என பல ஊர்கள் தாழையின் பெயரால் உருவாகியுள்ளன. இது நெய்தல் நிலத்திற்குரிய மரம் ஆகும். தாழம்பூ கைதகப் பூ என சித்த மருத்துவத்தில் சொல்லப்படுகிறது. இலக்கியங்களில் தாழை குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு உள்ளிட்ட சங்க […]

View More

நீர் நிறை – இலுப்பை

நிலத்தடி நீரை பெருக்கும் ஒரு ஆகச்சிறந்த மரம் இலுப்பை மணல்மேடு மற்றும் அதனை சார்ந்த கிழாய், இலுப்பப்பட்டு, குறிச்சி, சித்தமல்லி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட கிராமங்களில் இலுப்பை மரங்கள் தோப்புகளாகவும், தனித் தனி மரங்களாகவும் வளர்க்கப்பட்டு வந்தன. இந்தநிலையில் தற்போது முற்றிலும் அழிந்துவிட்டது. வவ்வாலுக்கு மிகவும் பிடித்தமான உணவு இலுப்பை பழங்கள் தான். இலுப்பையின் அழிவு வவ்வாலின் அழிவு. வவ்வாலின் அழிவு கொசுவின் வளர்ச்சி. கொசுக்களின் வளர்ச்சி வியாதிகளின் வளர்ச்சி. எனவே இலுப்பை மரத்தை, அழிவில் இருந்து மீட்க […]

View More

அழிந்து வரும் மரங்கள்

உலக அளவில் வெப்பநிலை உயர்வதற்கான காரணங்களில் ஒன்று, மரங்களை வெட்டுவதும். நமதுநாட்டில் பல பாரம்பரிய மரங்கள் பல அழிந்து வருகின்றன. அவ்வாறு அழிந்து வரும் மரங்களில் இலுப்பை, இலந்தை, மாவிலங்கம், சந்தன வேங்கை, தான்றி, மகிழம், கோங்கு, விளா, சரக்கொன்றை, கடுக்காய், மகாவில்வம், திருவோடு, பூவரசு, வெட்டிவேர், சந்தனம், நாவல், உருத்திராட்சம், மஞ்சள் கடம்பு,பரம்பை, குமிழ், மலை அரசி , இச்சி மரம், நறு உளி, பன்னீர், இலுப்பை, அசோக மரம், யானை குண்டுமணி போன்றவை ஆலமரமும், […]

View More

எது பொறுப்பு

இயற்கையின் மகத்துவம் ஓரறிவு கொண்ட புல், பூடு, செடி, கொடி, மரம் ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு மூன்றறிவு கொண்ட எறும்பு, கரையான், அட்டை. நான்கறிவு கொண்ட நண்டு, தும்பி, வண்டு ஐந்தறிவு படைத்த விலங்கு, பறவை போன்றவைகள் நிறைந்த இயற்கையை பராமரித்து பாதுகாக்கும் ஆற்றல் மிகுந்த வேலைக்காரர்களாக ஆறறிவு கொண்ட மனிதனை இறைவன் படைத்துள்ளார். இயற்கை வளத்தை முழுமையான உயிர்ப்போடு அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதே நமது வேலை.

View More
×